Thursday, 28 August 2014

கோவிந்தா என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா ?






கோவிந்தா என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா ?
கோ என்றால் உலகம் விந்தன் என்றால் காப்பாற்றுபவன்.
உயிர்களை எல்லாம் காப்பாற்றுபவன்.
கோ என்றால் நல்ல நயமான வார்த்தை விந்தன் என்றால் உரைப்பவன்
உலகை நல் வழிப்படுத்த கீதை உரைத்தவன்  
கோ என்றால் பசு விந்தன் என்றால் காப்பவன்
அன்று கௌரவர் சபையில் எவாராலும் வெல்லமுடியாத பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், விதுரர் போன்றவர்களும் இருந்தனர்.மேலும் திரௌபதியின் கணவர்களான மிகவும் பலசாலியான பீமன் மூவுலகையும் வெல்லும் மாவீரனான அர்ஜுனன் போன்ற எவராலும் விழி இழந்த திருதராஷ்ட்ரனின் மகனான தீய எண்ணம் கொண்ட துரியோதனனின் ஆணைக்கு இணங்க அவன் தம்பி துச்சாதனன் திரௌபதியின் வஸ்திரத்தை எழுத்து மானபங்கம்படுத்த முயலும்போது அனைவரும் செயலற்று இருக்க          திரௌபதி கோவிந்தா! கோவிந்தா! என்று இறைவனை  இரு கரம் தூக்கி என்னை காப்பாற்று  என்றவுடன் மானத்தை காப்பாற்றியது கோவிந்தன்.
இதைப்போல எப்படிப்பட்ட துன்பம் நம்மை தீண்டினாலும் அந்த அலர்மேல்மங்கை உறை மார்பனான கோவிந்தனை சரணடைந்தால் வெயில் பட்ட பனிபோல் மறையும் இது நிதர்சனமான உண்மையாகும்.
நம்மில் சிலர் எதிரில் யாரேனும் திருமண் இட்டு வந்தால் கேலியாக கோவிந்தாகோவிந்தா அவ்வளவுதான் இன்னைக்கு இந்த காரியம் நடக்காதுப்பா என்று சொல்வதை நாம் பார்த்திருப்போம். உண்மையில் அப்படி அவர் சொன்னதுதான் நடக்கும்.
ஏனெனில் நாம் முன்பே பார்த்தபடி கோவிந்தனை அழைத்து நாம் என்ன கேட்கிறோமோ அதை உடனடியாக தந்து விடுகிறார்.
எனவே இனி அவ்வாறு கேலி செய்வதாக எண்ணி உங்கள் காரியத்தை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்.
நீங்கள் முக்கியமான வேலைக்கு செல்லும் போது எதிரில் திருநாமம் அணிந்த எவரேனும் வந்தால் கோவிந்தா என் வேலை நல்லபடியாக முடிய வேண்டும் என்று சொல்லி பாருங்கள் மிகவும் ஆச்சர்யப்படுவீர்கள் வெற்றியும் ஆனந்தமும் கிடைக்கும்.
இதனை என் தந்தை கோவிந்தனின் திருவுள்ளப்படி எழுதுகிறேன்.
கோவிந்தா..... கோவிந்தா.......கோ.....விந்தா.....              

    

No comments:

Post a Comment